Inncovid.Norge, பேர்கன் பல்கலைக்கழகத்தால் வேறும் சில அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கொரோணா பரவுதலை கருத்தில்க் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆய்வாளர்களும் நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள். அத்துடன் அவர்கள் புலம்பெயர் சமூகத்தில் கொரோணா பரவுதல் பற்றி அக்கறை கொண்டவர்கள். இத்திட்டம் NOAS இன் ஆதரவுடனும், மற்றும் Stiftelsen Dam இன் பகுதி நிதியுதவியுடனும் நடைபெறுகிறது..

எமது இரண்டு நோக்கங்கள்: அதில் ஒன்று inncovid.no மூலமாக புலம்பெயர் சமூகத்திற்கு இலகுவான முறையிலும் விளங்கக் கூடிய முறையிலும் தகவல்களை வழங்குவதும், அத்துடன் புலம்பெயர் சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு கொரோணா தொற்று சம்பந்தமான விடையங்களை இதன் மூலம் பகிர்ந்து கொள்வதும் ஆகும். இரண்டாவது நோக்கம், கொரோணா காலப்பகுதியில் புலம்பெயர் சமூகத்திடம் இருந்து நாம் அறியவிரும்பும் சில விடையங்கள் : 1) தகவல் அணுகுமுறை 2) பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் அவற்றை கையாளும் முறைகளும் 3) covid -19 தொற்று காலப்பகுதியில் இந்நோயை கையாளும் முறைகள். இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடையங்கள் பற்றிய அறிவை நாம் பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் நாம் ஒரு சிறந்த மருத்துவ சேவையை வழங்கலாம் என நினைக்கின்றோம்.

Esperanza Diaz
திட்டப்பொறுப்பாளர்
UiB

Elzbieta Czapka
திட்ட ஒருங்கிணைப்பாளர்
OsloMet

Ahmed Ali Madar
திட்ட உதவியாளர்
UiO

Kathy A. Møen
திட்ட உதவியாளர்
Noklus

Gaby Ortiz Barreda
திட்ட உதவியாளர்
UiB

Raquel Herrero Arias
திட்ட உதவியாளர்
UiB

Wegdan Hasha
திட்ட உதவியாளர்
UiB

Jasmin Haj Younes
திட்ட உதவியாளர்
UiB

George Deeb
திட்ட உதவியாளர்
UiO

Andreas Díaz Tveit
இணையத்தளப் பொறுப்பாளர்

Peter Krooni
இணைய வடிவமைப்பாளர்

முக்கியகுறிப்பு: நீங்கள் சுகவீனமாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கான மருத்துவ உதவி எம்மிடம் பெறமுடியாது. உங்கள் உடல்நிலை சீராக இல்லையென்று உணர்ந்தால் உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது அண்மையிலுள்ள அவசர மருத்துவ நிலையத்தையோ (legevakt) அணுகுங்கள். இல்லையேல், மிகவும் அவசரமான பட்சத்தில் வைத்தியசாலையின் அவசரப் பிரிவை நாடுங்கள் (AMK). அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் தொலைபேசியில் அழைக்கும்போது உங்களுக்கு சுவாசத்தில் தடங்கல்கள் அல்லது அதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா எனத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு சுவாசிப்பதில் தடங்கல்கள் அல்லது இடையூறுகள் இருப்பின் அதை பின்வரும் இணையத்திலும் பதிவிடலாம்
: koronasjekk (நோர்வே மொழியில்).