Inncovid.no உங்களை வரவேற்கிறது, நோர்வேயில் வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கான கொரோணா வைரஸ் பற்றிய இணையத்தளம்!
முக்கியகுறிப்பு: நீங்கள் சுகவீனமாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கான மருத்துவ உதவி எம்மிடம் பெறமுடியாது. உங்கள் உடல்நிலை சீராக இல்லையென்று உணர்ந்தால் உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது அண்மையிலுள்ள அவசர மருத்துவ நிலையத்தையோ (legevakt) அணுகுங்கள். இல்லையேல், மிகவும் அவசரமான பட்சத்தில் வைத்தியசாலையின் அவசரப் பிரிவை நாடுங்கள் (AMK). அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் தொலைபேசியில் அழைக்கும்போது உங்களுக்கு சுவாசத்தில் தடங்கல்கள் அல்லது அதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா எனத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு சுவாசிப்பதில் தடங்கல்கள் அல்லது இடையூறுகள் இருப்பின் அதை பின்வரும் இணையத்திலும் பதிவிடலாம்: koronasjekk.no (நோர்வே மொழியில்).